யாழில் குடும்பஸ்தர் இறந்து 2 வருடங்கள்! பெண் அரச உத்தியோகத்தர் தற்போது கர்ப்பம்! நித்திரை குளிசை கொடுத்து கர்ப்பமாக்கினாரா வைத்தியசாலை ஊழியரான மாமனார்?
யாழில் 2 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் 33 வயதான (விபத்து நடந்த காலம்) ஒரு பிள்ளையின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவா் மரணமடைந்திருந்தார். அவரது மனைவியான 34 ( தற்போதைய) வயதான இளம் குடும்பப் பெண் தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். குறித்த பெண் ஒரு அரச உத்தியோத்தர் ஆவார். குறித்த குடும்பப் பெண்ணுக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் மருத்துவப் பரிசோதனை செய்த போது தான் கர்ப்பமாகியுள்ளமையை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். கணவன் இறந்த பின் குறித்த பெண் தனது சீதனவீட்டிலேயே தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்துள்ளார். பெண்ணின் சகோதரி கொழும்பில் தனது கணவனுடன் வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு பிரசவம் நடந்த போது பெண்ணின் பெற்றோர் கொழும்பில் சென்று தங்கியுள்ளார்கள். அதனால் தனித்திருந்த குறித்த பெண்ணுக்கு கணவனின் தந்தையான யாழில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் மருந்துவ உதவியாளராக கடமையாற்றும் 57 வயதான மாமன் இரவில் பாதுகாப்பிற்கு ஒரு மாதமாக இரவில் தங்கியிருந்துள்ளார்.
இவ்வாறான நிலையில் தற்போது பெண் அரச உத்தியோகத்தர் கர்ப்படைந்துள்ளதை அறிந்து கடும் குழப்பம் அடைந்துள்ளதுடன் தனது கணவனின் தந்தையான மாமனாரே தன்னைக் கர்ப்பமாக்கியுள்ளதாக சந்தேகித்து தனது பெற்றோருக்கு இது தொடர்பாக முறையிட்டதுடன் தற்கொலைக்கும் முயன்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து அப் பெண்ணின் பெற்றோர் கணவனின் தந்தை மற்றும் அவர்களின் குடும்பத்துடன் முரண்பட்டுள்ளதுடன் தற்போது தனது மகளைக் கற்பழித்துள்ளதாக பொலிசாரிடம் முறையிடவும் ஆயத்தமாகியுள்ளார்கள்.
அரச உத்தியோகத்தரான பெண் தனக்க நெருக்கமானவர்களுக்கு கூறிய தகவல்களின் படி ” மாமனார் வீட்டில் தங்கியிருந்த காலத்தில் சில நேரங்களில் இரவு நேரத்தில் இனம்புரியாத மயக்கநிலையில் இருப்பது போன்று நித்திரையில் இருந்துள்ளதாகவும் குறிப்பாக சனி, ஞாயிறு தினங்களில் நீண்ட நேரங்களின் பின்னர் காலை 8 மணியளவிலேயே தான் துாக்கத்தை விட்டு எழுந்துள்ளதாகவும் அது தனக்கு கடும் ஆச்சரியத்தை அந் நேரங்களில் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே குறித்த பெண் ஊழியர் பொலிசாரிடம் முறையிட ஆயத்தமாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

