யாழ் பல்கலை மாணவர்களுக்கிடையில் கடும் மோதல்!! தள்ளி விழுத்தப்பட்டார் துணைவேந்தர்
யாழ்.பல்கலைகழக 2ம் வருட, 3ம் வருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற தர்க்கம் தொடர்பாக யாழ்.பல்கலைகழக துணைவேந்தரிடம் தொிவித்து தர்க்கத்தை சுமுகமாக தீர்ப்பதற்காக முயற்சித்தபோது துணைவேந்தர், விரிவுரையாளர்கள் சிலர் மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இன்றைய தினம் மாலை பல்கலைகழக மாணவர்கள் சிலருக்கிடையில் தர்க்கம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாக மாணவர்கள் பல்கலைகழக நிர்வாகத்தை நாடி தர்க்கத்தை சுமுகமாக தீர்க்க முயன்றபோது துணைவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் காவலாளி ஆகியோர் இணைந்து தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுவதுடன், துணைவேந்தர் மாணவன் மீது தாக்குதல் நடாத்தி கழுத்தில் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறி மாணவன் கழுத்தில் காயத்தையும் காண்பித்ததார்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் பல்கலைகழக வாயிலில் போராட்டம் நடத்தும் மாணவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில் பல்கலைகழகத்திற்குள் அதிரடிப்படை மற்றும் பொலிஸாரை இறக்கி அடிப்போம், சுடுவோம் என துணைவேந்தர் அச்சுறுத்தியதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.
மேலும் விரிவுரையாளர்கள் பரீட்சையில் புள்ளியிட மாட்டோம் எனவும், பல்கலைகழகத்தில் இருந்து வெளியேற்றுவோம். என அச்சுறுத்தியதாக கூறும் மாணவர்கள் பல்கலைகழக துணைவேந்தருக்கும், காவலாளிக்கும், விரிவுரையாளர்களுக்கும் மாணவர்களை அடிப்பதற்கான உரிமையை யார் கொடுத்தது? காட்டுமிராண்டிகள்போல் மாணவர்களுடன் நடந்து கொண்டவர்களுக்கு தண்டணை வழங்கப்படவேண்டும் என மாணவர்கள் கேட்டுக் கொண்டனர். சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைகழக சுற்றாடலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதே வேளை ஊடகவியலாளர் ஒருவர் கூறும் போது
மாணவர்கள் – இரண்டாம் வருட மாணவர்கள் போதையில் இருப்பதாகவும் அவர்களை உடனடியாக பரிசோதித்து வளாகத்திற்கு வெளியில் அனுப்ப ஆவண செய்யுமாறு நிர்வாகத்திடம் மூன்றாம் வருட மாணவர்கள் கோரியதாகவும் நீண்ட இடைவெளியின் பின்னர் துணைவேந்தர் வந்து மோதலை தடுக்க முற்படுகையில் ஏற்பட்ட தள்ளுபாட்டில் வீசி பதிக்கப்பட்டார். தொடர்ந்து காவலாளி மற்றும் விரிவுரையாளர் இணைந்து மாணவர்களுக்கு அடித்தனர். சிறப்பு அதிரடிப்படை மற்றும் பொலிஸை இறக்கி அடிப்பேன் என துணைவேந்தர் தெரிவித்தார்.
நிர்வாக தரப்பு – இரண்டாம் வருட மாணவர்களுக்கும் மூன்றாம் வருட மாணவர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெறுகிறது அடிவாங்கும் மாணவர்களை காக்குமாறு கூட்டம் ஒன்றில் இருந்த துணைவேந்தருக்கு தகவல் கிடைக்க சம்பவ இடத்திற்கு சென்ற துணைவேந்தர் மாணவர்களை சமாதானப்படுத்த முயற்சித்த போது துணைவேந்தர் ஓரிரு மாணவர்களால் தள்ளிவிடப்பட்டதும் அங்கு கடமையில் இருந்த கவலாளி குறித்த மாணவர்களை நெருங்க விடாமல் மீள தள்ளிவிட்டார். இதனிடையில் பொலிஸார் வாளாகத்திற்குள் நுழைந்தனர். இப்பிரச்சினையை தான் சமாளிப்பதாக பொலிஸார் வளாகத்தை விட்டு வெளியில் செல்லுமாறு துணைவேந்தர் பணித்தார்.
உண்மையில் மாணவர்களுக்கிடையில் ஏற்படும் மோதலை தடுக்கும் முயற்சியில் துணைவேந்தர் ஈடுபட்டதையோ அல்லது துணைவேந்தரின் பாதுகாப்பிற்காக கடமையின் நிமிர்த்தம் காவலாளி மாணவர்களை தள்ளி விட்டதையோ பிழை என கருத்து கூறுவது மாணவர்களின் மோதலை நியாயப்டுத்துவதற்கு சமனானது.
இன்று வளாகத்திற்கு உள்ளே இடம்பெற்றதால் சம்பவம் பெரிய அளவில் வெளி வருகிறது. இதே போன்ற எத்தனையோ மோதல் சம்பவங்கள் மாணவர்கள் விடுதியிலும் தங்கியிருக்கும் வீடுகளிலும், வீதிகளிலும் இடம்பெற்றுக்கொண்டுதான் உள்ளது.
இன்றைய மோதல் சம்பவம் தொடர்பில் நாளை சுயாதீன விசாரணை இடம்பெறவுள்ளதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விசாரணையின் முடிவில் குற்றம் உரியவர் கண்டறியப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாவர்கள் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. இதனால் மாணவர்கள் சாதிக்கப்போவது ஒன்றுமில்லை கால வீணடிப்பு மட்டுமே.

