புதினங்களின் சங்கமம்

கொரோனா சந்தேக நபர்களைத் தேடி வீடு-வீடாக இராணுவத்தினர் சோதனை

மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் இதுவரை தம்மை அடையாளப்படுத்தி, தனிமைப்படுத்திக்கொள்ளாமல் மறைந்திருக்கும் பணியாளர்களைத் தேடி கண்டறியும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறான தொழிலாளர்களை வீடு-வீடாகச் சென்று இராணுவத்தினர் தேடி வருவதாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்று நோய் தொடர்புடைய விடயங்களை பொதுமக்கள் அறிவிக்க ஏதுவாக 1933 என்ற விசேட தொலைபேசி இலக்கத்தை பொலிஸார் அறிமுகம் செய்துள்ளனர். இது குறித்த தகவல்களை பொதுமக்கள் 011 5978701, 0115978703, 0115978719, 0115978722 என்ற எண்களூடாகவும் தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 3 மாதங்களின் பின்னர் சமூகத்திற்குள் தொற்று நோயாளர்கள் கண்டறியப்பட்ட மூன்று நாட்கள் கடந்துவிட்டபோதும் தொற்று மூலத்தை இதுவரைக் கண்டறிய முடியாது சுகாதார அதிகாரிகள் திணறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.