கிளிநொச்சி, மன்னாரில் ரயிலுடன் மோதி இருவர் பலி!! (Photos)
தொடருந்துகளுடன் மோதுண்டு கிளிநொச்சியிலும் மன்னாரிலும் இருவரி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இவை குறித்து மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சியில்
தொடருந்துடன் மோதுண்டு 45 வயது மதிக்கதக்க ஆணொருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த தொடருந்துடன் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் சடலத்தை புகையிரத ஊழியர்கள் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் ஒப்படைத்ததை அடுத்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் மன்னாரில்
கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி வந்த தொடருந்துடன் மோதி இன்று காலை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னார், சௌத்பார் தொடருந்து நிலையத்தில் இருந்து சுமார் நூறு மீற்றர் தொலைவில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி வருகை தந்த தொடருந்துடன் மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் நூறு மீற்றர் தொலைவில் குறித்த நபர் இன்று வியாழக்கிழமை காலை 4 மணியளவில் மோதி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சுமார் 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரிய வருகின்றது.சடலம் அடையாளம் காணப்படவில்லை.

