யாழில் நள்ளிரவு மாட்டுக் கொள்ளையர்கள் மீது பொலிசார் சூடு!! 17 வயதுச் கொள்ளையன் பலி! நடந்தது என்ன?
இன்று அதிகாலை(10.02.2025) ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 17 வயதான மாடு பிடி கொள்ளையன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று அதிகாலை குறித்த சிறு வயது கொள்ளையன் உட்பட மூவர் அல்லைப்பிட்டி பகுதியால் வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தவேளை வீதி கடமையில் இருந்த பொலிஸார் அவர்களை வழி மறித்தனர். பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்தமையால் பொலிஸார் துப்பாக்கி சூடு நடாத்தினர்.
துப்பாக்கி சூட்டில் வட்டுக்கோட்டை வடக்கு கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் வசிக்கும் 17 வயதான கொள்ளையன் பலியாகியுள்ளான் . அவனுடன் சென்ற நல்லூர் மற்றும் வட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்த இரு கொள்ளையர்களை ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலையான சிறு வயதுக் கொள்ளையனின் குடும்பமே பெரும் கொள்ளைக் கோஷ்டியுடன் சேர்ந்து இயக்கும் ஒரு குடும்பம் எனவும் இவர்களுக்கு பல் நீதிமன்றங்கள் வழக்குகள் உள்ளதாகவும் ஊரவர்களால் இவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் எனவம் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பகுதிகளில் நடைபெறும் மாட்டுக் களவுகளைத் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர் எனத் தெரியவருகின்றது.

