பிரான்சில் கொடூரம்!! இலங்கை தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொடூரமாகக் குத்திக் கொலை!! (Video)
குடும்பப் பிணக்குகள், வன்முறைகளாக வெடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துவரும் பின்னணியில் மற்றொரு படுகொலை இன்று பட்டப்பகலில் பாரிஸ் புறநகரான Noisy-le-Sec (Seine-Saint-Denis) பகுதியில் இடம்பெற்றிருக்கிறது.
நபர் ஒருவரின் மோசமான தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
அவர்களில் மூவர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்த அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது.
இன்று பகல் நிகழ்ந்த இக் குடும்பப் படுகொலைகள் தொடர்பில் வெளியான தகவல்கள் வருமாறு :
Rue Emmanuel Arago தெருவில் உள்ள வீடொன்றில் உயிரிழந்தவர்களது மாமனார் என்று கூறப்படும் ஆண் ஒருவர் கத்தி மற்றும் சுத்தியல் கொண்டு வெறித்தனமாகப் பலரைத் தாக்கி உள்ளார் என்று கூறப்படுகிறது.
அவரது பிடியில் இருந்து தப்பியோடிய இளைஞர் ஒருவர் அருகே உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இத்தகவலைத் தெரிவித்திருக்கிறார். அதனையடுத்து பொலீஸாரும் அவசர சேவையினரும் அங்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மூன்று மாடிகள் கொண்ட வீட்டின் கதவை உடைத்து உள் நுழைந்த பொலீஸார் அங்கே கோரமான காட்சிகளைக் கண்டுள்ளனர். குழந்தைகள் உட்பட ஜவர் இரத்த வெள்ளத்தில் சடலங்களாகக் காணப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபரும் கோமா நிலையில் மீட்கப்பட்டார் எனத் தெரிகிறது. அவருக்கு அருகே, கத்தி, சுத்தியல் என்பன காணப்பட்டுள்ளன.
தேசிய மற்றும் நகரப் பொலீஸாரால் சம்பவம் நடந்த பகுதி உடனடியாக மூடப்பட்டு வெளியாட்கள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. பஸ் மற்றும் வாகனப் போக்குவரத்துகள் மாற்று வழிகளில் திசை திருப்பப்பட்டுள்ளன.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இலங்கைத் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் ஒரு பெண் உள்ளிட்ட ஐவர் கத்தியால் குத்தியும் தாக்கியும் படுகொலை செய்யப்பட்டுள்ளர். இந்தக் குடும்பத்தைச் சோ்ந்த ஒருவரே இந்தக் கொலைகளைச் செய்துள்ளதாகத் தெரியவருகிறது.
பிரான்ஸ் நேரப்படி இன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இந்தக் கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கும்பத்துடன் தொடர்புடைய மேலும் ஐவர் கத்திக்திக்குத்து மற்றும் தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நொய்ஸி-லெ-செக் (Noisy-le-Sec) நகரின் றூ இம்மானுவேல் அரகோ (rue Emmanuel Arago) வீதியில் இலங்கைத் தமிழர்கள் வசித்து வரும் வீடொன்றிலேயே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த வீதியில் உள்ள மதுபான சாலை ஒன்றுக்கு படுகாயமடைந்த நிலையில் வந்த இளைஞன் ஒருவர் உதவிக்குழுவை அழைக்கும் படி கோரியுள்ளார்.
எனது மாமா என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்துவிட்டார் என குறித்த இளைஞன் மதுபானசாலை நிர்வாகியிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு சில நிமிடங்களில் வந்த பொலிஸார் சம்பவ இடத்தில் இருவர் சடலமாகக் கிடப்பதைக் கண்டனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்டவா்களில் மூவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்குள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஐவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறைக்கு பலியானவர்களில் 2 வயது முதல் 14வயது வரையான நான்கு சிறுவர்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாக பாரிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடம் மிகவும் பயங்கரமாக இருந்தது. கத்தி ஒன்றும் பெரிய சுத்தியல் ஒன்றும் கொலைச் சம்பவத் இடம்பெற்ற வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என பாரிஸ் நகர பொலிஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளார்.
இந்தக் கொலைகளைப் புரிந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் அதே குடும்பத்தைச் சேர்ந்த நபரும் படுகாயங்களுடன் சம்பவ இடத்தில் கோமா நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையிலா் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தினரைக் கொலை செய்துவிட்டு இவரும் தன்னைத் தானே குத்தித் தற்கொலை செய்ய முயன்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
Au moins 5 morts dont plusieurs enfants à Noisy-Le-Sec. La piste privilégiée est celle du drame familial.
Il y a également plusieurs blessés dans un état grave dont l’auteur présumé des faits. pic.twitter.com/h7laWLHtNA


