யாழ்.இளைஞன் இத்தாலியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை! (படங்கள்)
இத்தாலியில் வசித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கைதடி, குமாரநகரைச் சேர்ந்த நடேசு ஜீவானந்தன் (வயது-36) என்ற இளைஞனே நேற்று முன்தினம் (30) இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
இச் சம்பவம் தொடர்பில் அந் நாட்டுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



