புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழக விடுதி மாணவர்களுக்கு அட்டைக் கறி!! மாணவர்களுக்கும் மிரட்டல்!! (Photos)

யாழ்.பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட, விஞ்ஞானபீட, முகாமைத்துவ பீட1ம் வருட மாணவர்கள் தங்கியிருக்கும் கோண்டாவில் விடுதியிலுள்ள மாணவர்களில் பெரும்பாலானோர் ஒரு குறித்த தனிநபரிடமிருந்தே தங்களுக்கான 3 வேளைச் சாப்பாட்டையும் பெற்று வருகின்றனர்….
இன்றையதினம் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவுப் பொதியில் மர அட்டை ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக விடுதி அதிகாரிக்கு அறியப்படுத்தி அதன் மூலம் பிரதேச சுகாதார அதிகாரிக்கு(PHI) அறியப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விடயமறிந்த உணவை வழங்கிய குறித்த நபர் உடனடியாக உணவுப் பொட்டலத்தைப் பார்வையிட விடுதிக்கு வந்து அவ்வுணவுப் பொட்டலத்தை மாணவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதோடு அம் மாணவர்களை “எந்த இடம் நீ” என்று மிரட்டும் பாணியில் அதட்டியுள்ளார்…
இது தொடர்பாக விடயமறிந்து அந்த நண்பர்களுடன் கலந்துரையாடிய போது உணவைப் புகைப்படம் எடுத்த பின் விடுதி அதிகாரியின் அனுமதியுடனேயே அவ் உணவுப் பொட்டலத்தை குறித்த நபரிடம் மீளச் செலுத்தியதாகத் தெரிய வருகிறது.
இப்பதிவு ஏனென்றால்….
வெளிமாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு வந்து விடுதிகளில் தங்கிநிற்கும் மாணவர் கடைச் சாப்பாட்டினால் வரும் அசௌகரியங்களைக் குறைக்கவும்…வீண் அலைச்சல்களைத் தவிர்த்துக் கொள்ளவும் ஒரு சொற்பக் காசை மீதப்படுத்தவுமே இவ்வாறான தனி நபர்களிடமிருந்து உணவைப் பெற வேண்டியுள்ளது…
ஆனால் உணவு விநியோகத்தைப் பொறுப்பெடுத்தவர்களின் அசண்டையீனப் போக்கையும்…தவறை ஏற்றுக் கொள்ளாது மாணவர்களை மிரட்டும் பாணியில் செயற்பட்ட கேவலமான போக்கையும் மக்கள் மத்தியில் தெரியப்படுத்தவே இப்பதிவு.வ்
மாணவ நண்பர்கள் இனிமேலும் இவர்களை நாடாமல் விடுவதே முறையான வழியாகும்…