புதினங்களின் சங்கமம்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்னால் பதற்றம், விசேட அதிரடிப்படை குவிப்பு..!

யாழ்.போதனா வைத்தியசாலை முன்னால் பதற்றம், விசேட அதிரடிப்படை குவிப்பு..!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் தொடர்பில் மக்கள்
சந்தேகமடைந்த நிலையில் உடனடியாக விசேட அதிரடிப்படையினர் மற்றும் குண்டு செயலிழக்க
செய்யும் பிரிவினர் காரை சோதனையிட்டனர்.

போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வெள்ளை நிற கார் ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனை அவதானித்த பொதுமக்கள் அது தொடர்பாக சந்தேகமடைந்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல்
வழங்கினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் மற்றும் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் குறித்த காரை ஆராய்ந்துள்ளதுடன்,

உரிமையாளரை உடனடியாக கண்டறியும் முயற்சிகளை மேற்கொண்டனர். இதனடிப்படையில் குறித்த கார் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என அடையாளம் காணப்பட்டதுடன்,

உரிமையாளரை தொடர்பு கொண்டபோது உரிமையாளர் போதனா வைத்தியசாலைக்குள் இருந்து வெளியே வந்து தனது காரை அடையாளப்படுத்தியுள்ளார்.

இதனால் யாழ்.நகருக்குள் கடுமையான பதற்றம் நிலவியது. ஆனாலும் காருக்குள் அசம்பாவிதத்தை உண்டாக்ககூடிய ஒன்றும் இல்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.