இலங்கையில் உள்ள சகல வாகன ஓட்டுனர்களிடம் பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்!!
வாகனங்களை பாதையில் நிறுத்தி வைத்துவிட்டு செல்லும் போது வாகனத்தின் முற்புர கண்ணாடியில் (windscreen) தங்களது பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை எழுதி வைத்து விட்டு செல்லுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை பதிவு செய்யமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்படவுள்ள விபரீதங்களை தடுத்துக் கொள்ள முடியும் எனவும் உரிமையாளர்கள் இல்லாத வாகனங்களை இனங்காண முடியும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.