சகல அரசாங்க பாடசாலைகளுக்கும் 29 ஆம் திகதி வரை விடுமுறை
சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களால் 22 ஆம் 23 ஆம் திகதிகளில் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.