இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி மரணம்… லேசான அறிகுறியுடன் சென்றவர் மோசமான நிலைக்கு சென்றது ஏன்? உண்மையை உடைத்த மருத்துவர் (Video)

பாடகர் எஸ்பிபி-யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரைக் காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர் பூபதி ஜான் கூறிய நிலையில் சற்று முன்பு எஸ்பிபி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 14ம் தேதி மிகவும் மோசமடைந்தது.

பின்பு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, சற்று சகஜ நிலைக்கு திரும்பிய எஸ்பிபி விரைவில் வீடு திரும்புவர் என பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் திடீரென்று நேற்று மீண்டும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக சென்றுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

தற்போது மருத்துவர் பூபதி ஜான் என்பவர் கூறுகையில், மிகவும் லேசான அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட பாடகருக்கு எட்டு நாட்களுக்கு பின்பு பாதிப்பு அதிகமாகியுள்ளது.

மூச்சுத்திணறல் அதிகமாகி, தொற்று அதிகரித்ததுடன், உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பின்பு கொடுக்கப்பட்ட மருந்துகளையும் மீறி பாதிப்பு அதிகரித்த பின்பு ஆக்சிஜனிலிருந்து வெண்டிலேட்டருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வெண்டிலேட்டரில் உடல்நிலை சீராகவில்லை என்பதால், எக்மோ சிகிச்சைக்கு மாற்றப்பட்டுள்ளார். எக்மோ சிகிச்சை என்பது செயலிழந்த நுரையீரல் செய்யும் வேலைகள் அனைத்தும் செய்வதே எக்மோ சிகிச்சை என்றும் கூறியுள்ளார்.

இந்த சிகிச்சை செல்லும் நாட்களில், தொற்று அதிகரித்துவிட்டால் மல்டி ஆர்கன் பெயிலியர் என்று கூறக்கூடிய, உடலில் இருக்கும் மற்ற உறுப்புகள் இதயம், சிறுநீரகம், ரத்தநாளங்கள் செயலிழக்க ஆரம்பித்துவிடுவதாகவும் கூறியுள்ளார்.

எஸ்பிபிக்கு இவ்வாறு உறுப்புகள் செயலிழந்துவிட்டதால், அவரின் நிலை மோசமாக இருப்பதாகவும், காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர் கூறிய நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.