கொரோனா தடுப்பூசி பெற்ற யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணருக்கு கொரோனா!!
யாழ்.போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அடையாளம் காணப்பட்ட ஐவரில் மருத்துவ நிபுணரும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது.
தொண்டை நோ, தலையிடி போன்ற அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் அவர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட்ட நிலையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணராகிய அவருடைய குடும்பத்தார் கொழும்பில் வசிப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அருவிக்குத் தெரிவித்தன.