புதினங்களின் சங்கமம்

மன்னார் எருக்கலம் பிட்டியில் 50 லட்சம் ரூபா பெருமதியான கடல் அட்டையுடன் ஒருவர் கைது

மன்னார் மாவட்டதிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டுல்ல வீரசிங்கவின் அறிவுரையின் பேரில்,மன்னார் பொலிஸ் பொறுப்பதிகாரி கிருசாந்தன் அவர்களின் வழிகாட்டலின்படி,மன்னார் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று முன்தினம்(22) 50 லட்சம் பெருமதியான 724கிலோ 500கிராம் கடல் அட்டையுடன் மன்னார் எருக்கலம்பிட்டியை சேர்ந்த சந்தேக நபரினை கைது செய்து செய்துள்ளனர்
கைப்பற்றிய கடல் அட்டைகளை,மன்னார் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையிடம் ஒப்படைத்து உள்ளதுடன் மேலதிக விசாரணையின்பின் சந்தேக நபரினை இன்றைய தினம்(23) மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்க்கொள்ளபட்டுள்ளது