வவுனியா பிரதேச செயலகத்தில் திடீரெனத் தீக்குளிக்க முற்பட்ட பெண்ணால் பரபரப்பு! (Video)

இன்று (23) காலை 10.00 மணியளவில் வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் காணிப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என தெரிவத்து வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் தீக்குளிக்க முற்பட்ட பெண்ணால் அவ்விடத்தில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.

மேலும் தெரியவருகையில்,

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோவிற்குளம் பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினரின் மனைவிக்கும் அவரது கணவரின் தாயாருக்குமிடையில் காணிப்பிரச்சனை இருந்து வந்துள்ளது.

குறித்த காணிப் பிரச்சனைக்கு பல வருடங்களாக தீர்வு கிடைக்காதமையினால் குறித்த குடும்பப் பெண் வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் அவரது பயணப்பொதியினுள் மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டியுடனும் காணிப்பிரச்சனை தொடர்பான கடிதங்களை தாங்கிய பதாதைகையினையும் ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன் காரணமாக அவ்விடத்தில் சற்று பதட்டமான நிலமை காணப்பட்டதுடன் வவுனியா சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விஜயம் மேற்கொண்டதுடன் பெண்ணின் பயணப்பொதியினுள் இருந்த மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டியையும் மீட்டெடுத்தனர்.

அதன் பின்னர் வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன் அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணும் பொலிஸாரும் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணின் கணவரின் தாயாரை அழைத்து அவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு காணிப்பிரச்சனைக்கு தீர்வினை தருவதாக பிரதேச செயலாளர் வாக்குறுதியி அளித்தமையடுத்து இச் சிக்கல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

error

Enjoy this blog? Please spread the word :)