விடுமுறையின்மையால் தற்கொலைக்கு முயன்ற பொலிஸ்; யாழ். சுன்னாகத்தில் சம்பவம்!
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தமக்கு விடுமுறை வழங்கவில்லை என்று அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தச் சம்பவம் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது எனத் தெரியவருகின்றது.
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தமக்கு நீண்ட நாட்களாகியும் விடுமுறை வழங்கப்படவில்லை என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் தமக்கு விடுமுறை வழங்குமாறு கேட்டுள்ளார்.
எனினும், அவருக்கு விடுமுறை வழங்கப்படவில்லை. இதனால் மன விரக்தி அடைந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அதிகளவான பனடோல் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பாதிப்புக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

