புலிகள் இல்லாதது முக்கால் சோனிகளுக்கு கொண்டாட்டமா?? நடப்பது என்ன?
ஆயுதங்கள் மெளனிக்கும் வரை இலங்கையின் எந்தப்பாகத்திலும் தாக்குதல் நடாத்தக்கூடிய திறன் புலிகளிடம் இருந்தது. அதுவும் பொதுமக்கள் மீதான தாக்குதலை தென்னிலங்கையில் நடத்துவது என்பது புலிகளை பொறுத்தவரை மிக இலகுவான விடயமாகவே இருந்தது.ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. புலிகளிடம் இறுதிவரை விமானங்கள் இருந்தன.
பெருந்தொகை மக்கள் கூடும் இடங்களின் மீது தென்னிலங்கையில் தாக்குதல் நடாத்துவது ஒன்றும் புலிகளுக்கு பெரிய விடயமே அல்ல. ஆனாலும் அவர்கள் அதை செய்யவில்லை.
தம் எதிரியின் இலக்கை மட்டுமே தேர்வு செய்து, மக்களின் இழப்பை தவிர்ப்பதற்காக அநேக சமயங்களில் பெரும்விலை செலுத்தியவர்கள் புலிகள்.
இறுதிவரை தம் கொள்கையில் வழுவாது , விடுதலைப்போரை வழிநடத்தி மெளனித்து, வித்தானவர்கள் புலிகள். அன்று பயங்கரவாதம் என்னும் வரையறைக்குள் புலிகளை புகுத்தி , பல தசாப்தங்களாக தமிழர்களின். விடுதலைக்காக போராடிய விடுதலை அமைப்பை சர்வதேச, இந்திய கூட்டுடன் இலங்கை அரசால் அழிக்க முடிந்தது. இன்று, புலிகளை அழிக்க முண்டு கொடுத்த அதே சர்வதேசம் புலிகளை புரிந்துகொண்டிருக்கின்றது.
பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை நேற்று சிங்கள மக்கள் புரிந்து கொண்டிருப்பார்கள்.
புலிகள் கோலோச்சிய காலத்தில்கூட தென்னிலங்கை இவ்வளவு அச்சத்துடன் இருந்தது கிடையாது. தமிழர்களுக்கான உரிமைகளை மட்டுமே புலிகளும், தமிழர்களாகிய நாங்களும் கேட்டோம். அப்பாவிகளின் உயிரை அல்ல. அன்று விதைத்ததை இன்று இலங்கை அறுவடை செய்கின்றது.யார் பயங்கரவாதிகள் என்பதை உலகம் புரிந்துகொண்டது.!