புதினங்களின் சங்கமம்

யாழில் கொரோனா முகக்கவசம் அணிந்து சங்கிலி அறுத்த கள்ளன் இனங்காணப்பட்டான்!!

 

யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் ஆலயம் ஒன்றுக்குச் சென்ற பெணின் சங்கிலியை அறுத்துச் சென்ற நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் கொடிகாமம் இராமாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபட்ட பின்னர் வீடு திரும்பிய பெண்ணை முகத்துக்கு கொரோனாவுக்கு அணியும் முகக்கவசத்துடன் பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் தனியாக சென்ற நபர் அறுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண்ணினால் முறையிடப்பட்டுள்ளது.

தீவிர விசாரணைகளை மேற்கொண்ட கொடிகாமம் பொலிஸார் அந்தப் பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கமெராக்களை பரிசோதனை செய்து சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.