புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடாவில் கடந்த வாரம் திருமணமான தமிழ் இளைஞர் கார் விபத்தில் பரிதாப மரணம்.

கனடா ஒன்ராரியோவில் புளுமவூன்டன் எனும் இடத்தில் 03-09-2020 இரவு 11 மணியளவில் (Grey Road 19 Near Craigmore Crescent) Audi Sedan கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இரண்டு தமிழர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டு, ஒருவர் ரொரன்ரோ மருத்துவமனைக்கு மருத்துவ ஹெலிக்கொப்டரில் எடுத்துச்செல்லப்பட்டதாக ஒன்ராரியோ மாகாண பொலிஸாரின் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

விபத்தில் பரிதாபமாகக் கொல்லப்பட்ட ஒருவர் தனபாலசிங்கம் கஜன் (29) கடந்த சனிக்கிழமை திருமணம் செய்தவர் என்ற துயரமான செய்தி மேலும் குடும்பத்தினரினை துயரில் ஆழ்த்தி உள்ளது.

விபத்து நடந்த வீதி மூடப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.