புதினங்களின் சங்கமம்

விபத்தில் சிக்கிய புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இருவர் பலி! தாழங்குடாவில் பதற்றம்! (Video)

மட்டக்களப்பு மாவட்டத்தன் மண்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் இன்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிளில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஊயிரிழந்தவர்கள் புதுக்குடியிருப்பு கந்தசாமி ஆலய வீதியை சேர்ந்த 24வயதுடைய துலக்ஸன் மற்றும் 20வயதுடைய நிலுக்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தினை தொடர்ந்து பொதுமக்களினால் பஸ் தாக்கப்பட்டதுடன் பஸ் சாரதியும் நடத்துனரும் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தினை தொடர்ந்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

Image may contain: one or more peopleImage may contain: one or more people, people standing and outdoor