புதினங்களின் சங்கமம்

மல்லாவியில் ஆலங்கட்டி மழை பொழிவு!வன்னி பிராந்தியத்தில் தொடர் மழை!!

வன்னி பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்துவரும் நிலையில் இன்று மாலை மல்லாவி பகுதியில் ஆலங்கட்டி மழை பொழிவு இடம்பெற்றுள்ளது.

வன்னி பிராந்தியத்திற்குட்பட்ட முல்லைத்தீவு, முள்ளியவளை, மல்லாவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதேவேளை மல்லாவி பகுதியில் பரவலாக இன்று மாலை ஆலங்கட்டி மழை பொழிவு இடம்பெற்றுள்ளது. இவ்வாறு முள்ளியவளை பகுதியிலும் நேற்று மாலை ஆலங்கட்டி மழை பொழிவு இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

முள்ளியவளை பகுதியில் கடுமையான மழைப் பெய்து வரும் நிலையில் அங்கு பல்வேறு இடங்களில் பாரிய மரங்கள் முறிந்தும் பாறியும் விழுந்துள்ளது.

இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டம் உண்ணாப்புலப்பு பகுதியில் பெய்த கடும் மழையின் காரணமாக வீதியோரத்தில் நின்றிருந்த பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி குறித்த வீதியால் இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.