புதினங்களின் சங்கமம்

தாக்குதலை நடாத்திய பயங்கரவாதிகள் தங்கியருந்த அறையில் கொத்துறொட்டி, குர்ஆன் மீட்பு!!

இன்று -21- தீவிர விசாரணைகளை நடத்திவரும் பொலிஸ் , செய்தியாளர்கள் சிலரை ஷங்ரி லா
ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது.

616 ஆம் இலக்க அறையில் தங்கியிருந்த இரண்டு சந்தேக நபர்கள் சி 4 ரக குண்டை எடுத்துக்
கொண்டு மூன்றாம் மாடியில் உள்ள உணவகத்திற்கு வந்து ஒருவர் அதனை வெடிக்கச் செய்ததாகவும்
மக்கள் அங்குமிங்கும் சிதறி ஓடும்போது மற்றவர் மற்றதை லிப்டுக்கருகில் வெடிக்கச்
செய்ததாகவும் சி சி ரி வி ஆதாரத்தை வைத்து செய்தியாளர்களிடம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் இருந்த அறையில் கொத்து ரொட்டி பார்சல் ஒன்று இருந்துள்ளது. அல் குரான்
புனித நூல் ஒன்றும் இருந்துள்ளது. இவர்கள் வெளிநாட்டு பிரஜைகளா என்பதை ஆராயும் பொலிஸ்
முழு விபரங்களை சேகரித்து வருகிறது.