புதினங்களின் சங்கமம்

முன்னாள் போராளியின் பதிவு இது (Photos)

மீன் வாங்கி வர சந்தைக்குப் போனேன் எனது முன்னாள் நண்பனொருவன் 15 வருடம் மண்ணுக்காக போராடியவன் ஒரு கிலோ மீன் வாங்குவதற்கு வழியில்லாமல் அரை கிலோ மீன் வாங்குவதற்கு இன்று சந்தையில் என்னிடம் மச்சான் நூறு ரூபாய் இருந்தால் கிடைக்குமா பிள்ளைகள் மீன் சாப்பிட்டு மூன்று வாரங்கள் கடந்து விட்டதுடா மச்சான் என்று கேட்கும் நிலையில் தான் முன்னாள் போராளிகள் இன்று வாழ்க்கையில் பின்னால் நிற்கிறார்கள் நான் வைத்திருந்த 500 ரூபாய் காசில் 300 ரூபாய்க்கு மீனை வாங்கி மிகுதி 200 ரூபாய் காசை கொடுத்தேன் அவனுக்கு.?

Image may contain: one or more people, indoor and food

மண்ணுக்குப் போராடிய நாங்கள் மக்களுக்காக போராடிய நாங்கள் இன்று வாழ்க்கைக்காக போராடுகிறோம் வழிதெரியாமல் இதுதான் என்னைப் போன்ற எங்களைப்போன்ற அதிக முன்னாள் போராளிகளின் நிலைமை எப்பொழுது கரை சேரப் போகிறோம் என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் வாழ்வை வெறுத்து காலத்தின் கொடுமை என்று சொல்லிவிட முடியாது கையில் ஆயுதம் தூக்கிய நாங்கள் அதே கையை நீட்டி பிச்சை எடுக்கும் நிலைமையில் எம்மை கொண்டுவந்து விட்டிருக்கின்றது நமது சமூகம் எமது மக்கள் எமது மண்.மக்களின் கண்ணீரை துடைக்க ஆசைப்பட்டவர்கள் நாங்கள் எங்களின் கண்ணீரை துடைக்க இன்று எவருமே இல்லை. எம்மை கடந்து மூன்று நேர உணவை உண்ணும் இன்றைய சமூகம் கூட ஒரு நேர உணவை உண்ணும் எங்களைத் திரும்பிப் பார்க்க சஞ்சலப்படுகிறார்கள்.?

முத்திரை குத்தி விட்டார்கள் அரசின் முகவர் என்று உண்மைதான் இன்று முன்னாள் போராளிகள் அப்படித்தான் அதிகமானவர்கள் இருக்கிறார்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு?அதையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் அப்போது வாழ்ந்த அதே எண்ணம் கொள்கை சிந்தனையுடன் என்றும் இன்றும் யாரிடமும் அடிபணிந்து ஒருவரை காட்டிக் கொடுத்து அந்தப் பணத்தில் வயிற்றுப் பசியைப் போக்க நினைப்பவர்கள் நாங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.? இறுதிவரை இப்படியே வாழ்ந்து விடுவோம் மரணத்துக்குப் பயந்தவர்கள் நாங்கள் இல்லை என்பதைக் கடந்த காலத்தில் நிரூபித்தவர்கள் இப்போதும் அதைத்தான் எதிர்பார்க்கின்றோம் வாழ்வதைவிட.?

Image may contain: one or more people, food and indoor

இப்படி எங்களைப் போல் ஆயிரக்கணக்கான போராளிகள் கண்ணீரோடு பசியோடு அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாத நிலையில்தான் கொண்டு செல்கிறோம் ஒவ்வொரு நாளும்.? ஒரு சில போராளிகளின் செயற்பாடு காரணமாக ஒட்டுமொத்த போராளி சமூகத்தையும் இன்றைய சமூகம் ஒதுக்கி வைத்திருக்கிறது வேதனை அளிக்கிறது வாழ்க்கையில் உங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும்.?

பிறரை ஏமாற்றி பொய் சொல்லி அரசுடன் ஒட்டி உறவாடி வாழும் முன்னாள் போராளிகள் இருக்கிறார்கள் தான் இப்பொழுதும்.முன்னாள் போராளிகள் அரசின் முகவர்களாக வாழ்ந்திருக்கலாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.?

Image may contain: one or more people and people standing

நாங்கள அப்படி இல்லை இனியும் அப்படி இருக்கப்போவதில்லை இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்ந்தவர்கள் நாங்கள் இனியும் இப்படித்தான் வாழ்வோம்
அதிகமான துன்பங்களைத் தாங்கி பசியை மறந்து மண்ணுக்காக வாழ்ந்தவர்கள் கடந்த காலத்தில் இப்பொழுது வறுமை எங்களுக்கு பழகி போய்விட்டது இறுதி எங்களின் மரணம் வரை.?

இந்தப் பதிவை நான் பதிவு செய்கிறேன் என்று எனக்கு உதவி செய்வதற்கு எனது நண்பனுக்கு உதவி செய்வதற்கு என்று யாரும் பதில் அளித்து எங்களை காயப்படுத்தி விடாதீர்கள் எங்களைப் புரிந்து கொள்ளுங்கள் எங்களையும் அரவணையுங்கள் எங்களையும் மதியுங்கள் நாங்களும் சக மனிதர்கள் தான் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள் அது மட்டும் போதும் எங்களுக்கு இந்த வாழ்க்கையில்?????

முன்னாள் போராளி தமிழ்குமரன்?