புதினங்களின் சங்கமம்

யாழில் அங்கஜன் வெற்றிபெறக் காரணம் என்ன?? அதிர்ச்சித் தகவல்கள் இதோ!!

யாழ்ப்பாணத்தில் அங்கயன் இராமநாதனின் வெற்றிக்கு காரணம் என்ன?
அபிவிருத்தியா? இல்லை இல்லவே இல்லை போலி தேசியம்,, அதாவது போலியாக புலிகளின் புகழ் பாடுவது..
புலிகளின் பாடல்களை போடுவது..
தேசியத் தலைவர் பிரபாகரனை பற்றி மிக நேர்த்தியா (ஆனால் போலியாக) உயர்வாக பேசுவது..
இவற்றை நம்பிய இளையோர்களே இவரின் பின்னால் அணிதிரண்டார்கள்..
குறிப்பாக வடமராட்சி இளைஞர்களே பெருமளவில் இவரின் பின்னால் இணைந்தார்கள் காரணம் தலைவர் மேல் கொண்ட மரியாதை..
இந்த இளையோருக்கு அங்கயனின் உண்மை முகம் தெரியாது தெரிந்தால் இவர்களே அங்கயனை கட்டி வைச்சு வெளுப்பார்கள்..
தலைவரைப்பற்றியோ அல்லது புலிகளைப்பற்றியோ வேறு எந்த கட்சியினரும் பேச முடியாது, பேசினால் பயங்கர வாத தடைச்சட்டம் அவர்களை கைது செய்யும்..
புலிகளின் பாடல்களை ஒலிபரப்ப முடியாது பயங்கரவாத தடுப்பு பிரிவு பாயும்..
நான் நினைக்கிறேன் 2017 இல் வடமராச்சியில் நடந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதினக்கூட்டத்தில் ஒரு ஆட்டோவில் கட்டப்பட்ட ஒலிபெருக்கியில் புலிகளின் புரட்சி பாடல்கள் ஒலிபரப்ப பட்டது.. இதனை அறிந்த 4ஆம் மாடியினர் குறித்த ஆட்டோ உரிமையாளரிடமும், ஒலிபெருக்கி உரிமையாளரிடமும் விசாரனை தொடுத்திருந்தார்கள்.. அப்பொழுது றணில் மைத்திருயின் நல்லாட்சி, நான் நினைக்கிறேன் சுமந்திரனின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டார்கள்.. ஆனால் அதன் பின்னர் யாருமே கூட்டமைப்பின் கூட்டங்களில் புலிகளின் பாடல்களை ஒலிபரப்புவது இல்லை..
முன்னணியினர் இவ்வாறு பாடல்கள் ஒலிபரப்புவதும் இல்லை, புலிகளின் புகழ் பாடுவதும் இல்லை ஆனால் இறந்த போராளிகளையும் மக்களையும் அந்த அந்த காலங்களில் நினைவு கூறுவார்கள்.. அதற்கே இந்த இராணுவமும் விசேட அதிரடிப்படையும் ஏகப்பட்ட இடையூறுகளை விளைவிப்பார்கள்..
அப்புறம் எவ்வாறு அங்கயன் மட்டும் புலிகளின் புகழ் பட முடிகிறது? புலிகளின் பாடல்கள் பாட முடிகிறது?
அத்தனைக்கும் இவர் கோத்தாவின் செருப்பு.. கோத்தாவிற்கு தெரியும் தன் செருப்பு தனக்காக தேயுமே ஒழிய, தன் இனத்திற்காக தேயது என்று..

அத்துடன் அண்மையில் சசிகலா ரவிராஜ் வீட்டில் அம்மையார் சசிகலாவை சந்திக்க சென்ற வேளை ரவிராஜ் இன் உருவ சிலைக்கு அ்அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுள்ளார்.. இவர் உண்மையி ரவிராஜ் இற்கு ்அஞ்சலி செலுத்த விரும்பினால் அவரின் கொலைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்..
அத்துடன் அன்றைய தினம் சசிகலாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அண்ணனின் தொண்டன் ஒருவன் கேட்கிறான் இவர்கள் என்ன தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என நினைக்கிறார்களா? தலைவர் வருவார் என்று சொன்னார்.. இதனை வேறு கட்சிக்கார்ர் சொல்லி இருந்தால் கதை முடிஞ்சுது.

அத்துடன் ஆவா குழு என்று யாழ் மக்களை பயமுறுத்தி கொண்டிருக்கும் ஒட்டுக்குழு வேறு யாரும் இல்லை இந்த அங்கயனின் அடியாட்களதான்..

உண்மையில் அங்கயன் அபிவிருத்தியை காட்டி வெற்றி கொள்ள வில்லை.. மாறாக புலிகளையும் அதன் தலைவரையும் பயன் படுத்தியே வெற்றி கொண்டார்..
ஆனால் புலிகள் இருக்கிறார்களோ இல்லையோ தெரியாது மீண்டு வந்தால் அங்கயனுக்கு நெத்தி பொட்டு நிச்சயம்..

இதை சொல்லும் நான் நிச்சயமாக நாட்டிற்கு திரும்ப முடியாது என்பது தெரியும்.. ஆனால் என்றோ ஒருநாள் எங்கள் தேசம் விடுதலை அடையும் அங்கே வடக்கில் நிறுவப்பட்ட தந்தை செல்வா விமான நிலையத்தில் வந்து இறங்குவேன் என்ற நம்பிக்கையில் இதனை சொல்லுகிறேன்..

நன்றி

Thileep Kumar

Image may contain: 1 person, text that says "Thileep Kumar 1d யாழ்ப்பாணத்தில் அங்கயன் இராமநாதனின் வெற்றிக்கு காரணம் என்ன? அபிவிருத்தியா? இல்லை இல்லவே இல்லை போலி தேசியம்,, அதாவது போலியாக புலிகளின் புகழ் பாடுவது.. புலிகளின் பாட ல்களை போடுவது தேசியத் தலைவர் பிரபாகரனை பற்றி மிக நேர்த்தியா (ஆனால் போலியாக உயர்வாக பேசுவது. இவற்றை நம்பிய இளையோர்களே இவரின் பின்னால் அணிதிரண்டார்கள் ார்கள். அணிதி See more"