யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாதம்பையில் பலி!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மாதம்பையில் மீட்கப்பட்டுள்ளது.
மாதம்பை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பொலிஸாரின் மரணம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
அவருடைய மரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

