Home புதினங்களின் சங்கமம் பலமணிநேரம் வீதியில் கொடூர வெயிலில் காத்திருப்பு !!!திருகோணமலை வைத்தியசாலை நிலவரம்!

பலமணிநேரம் வீதியில் கொடூர வெயிலில் காத்திருப்பு !!!திருகோணமலை வைத்தியசாலை நிலவரம்!

திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களிலிருந்து அதிகாலையிலே எழுந்து வைத்தியசாலை வந்தடைந்து காலை ஆகாரம் தேநீர் அருந்துவதை துறந்து எப்படியாவது கிளினிக்கில் வரிசை படி மாத்திரைகளை பெற்றும் வீடு திரும்ப வேண்டும் எனும் அவாவுடன் காணப்படும் மக்களின் அவாவே இம்மக்களின் வீதிவரை நிற்கும் படத்தின் பிரதிபலிப்பாகும்.

அவர்களில் பாதிப்பேர் அதிகாலை 5 மணியிலிருந்து காலை 7 மணிவரை கால் கடுக்க வைத்தியசாலைக்குள் நுழைவதற்காக காத்துக்கிடப்பவர்கள்.

கீழேயுள்ள படங்கள் தங்கள் நிருவாகத்தின் கீழுள்ள வைத்தியசாலையில் கிளினிக்குக்காக வந்து வைத்தியசாலைக்கு வெளியே காத்திருப்பவர்கள்.

இவர்கள் யாரும் சுகதேகிகள் அல்லர். சுகதேகிகளாவற்காக உங்களை நாடி வந்திருக்கும் சுகவீனமுற்றவர்கள். சுகதேகிகளான எமக்கே 1 மணித்தியாலத்திற்கு மேல் நிற்க முடியாது அவஸ்தைப்படுகிறோம். அப்படியாயின் இவர்கள் நிலை?

7 மணிக்குப்பின் உள்ளே சென்றாலும் உரிய வைத்தியரை சந்திக்கும் வரை அங்கேயும் கால்கடுக்க காத்திருக்க வேண்டும். இவ்வாறான காத்திருப்புக்களால் சுகவீனமுற்றவர்கள் மேலும் உடல், உள ரீதியாக பாதிப்புக்குள்ளாகின்றனர்.

அத்தோடு இங்குதான் புதினமான லிப்ட் பூட்டி வைத்திருக்கிறார்கள் அந்த லிப்டுக்குள் ஒரு கதிரை போட்டு ஒருத்தர் இருப்பார் பார்வையாளர்கள் லிப்டில் செல்ல முடியாது படியினால் ஏரி செல்ல வேண்டும் நாலு மாடிக்கு. அயல் மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இவ்வாறு இல்லை என்பது நாங்கள் அறிந்த விடயம் உதாரணமாக வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் லிப்டில் எவரும் போய் வரலாம் கட்டுபாடு இல்லை பொதுமக்களின் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள இவ்வாறான விடயங்களை பாவனைக் தடை விதிப்பது யார்??? பொதுச்சுகாதார பிரிவா?வைத்தியசாலை நிர்வாகமா? அல்லது அங்கு திரியும் அல்லக்கைகள்லா?

ஆகவே, மேற்காட்டிய விபரங்களை கவனத்திலெடுத்து, இவ்வாறு ‘கிளினிக்’ வருபவர்களை, வீதியில் கால் கடுக்க காத்திருக்க வைக்காது வைத்தியசாலை வளாகத்தினுள் ஓரிடத்தை ஒதுக்கி அவர்கள் அமர்வதற்கு ஆசன வசதிகள் செய்து கொடுத்தால், அவர்களின் பாதி நோய் குணமாகும். உங்களுக்கும் கோடிப் புண்ணியம் கிடைக்கும்.

கவனத்தில் எடுப்பீரா?