இன்று அதிகாலை யாழ் அல்வாயில் இடம்பெற்ற கோழித் திருட்டு!
அல்வாய் பகுதியில் இன்று ஒரே தடவையில் 16 கோழிகள் களவாடப்பட்டு உள்ளது. அல்வாய் வெள்ளிருவைப்பிரிவை பகுதியைச் சேர்ந்த வீடு ஒன்றிலேயே இன்று அதிகாலை ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிறு அன்று இந்த கோழிகள் வாங்கப்பட்டு இங்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இவ்வாறு பதினாறு கோழிகள் ஒட்டுமொத்தமாக களவாடப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.