கடற்கரையில் காதலனுடன் ஜல்சா பண்ணி போலீசில் சிக்கினாரா ஜூலி? டுவிட்டரில் கதறல்

வீர தமிழச்சி என ரசிகர்களால் புகழ்பெற்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று மானத்தை கெடுத்துக்கொண்டு பாதியிலேயே துரத்திவிடப்பட்டவர் ஜூலி. என்னதான் பெயர் கெட்டாலும் பேமஸ் ஆவதற்கு குறைச்சல் இல்லை. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் டாக்டர் அனிதா என்ற படத்திலும், அம்மன் என்ற கடவுள் படத்திலும் ஹீரோயினாக கமிட் ஆனார். ஆனால் அந்த படங்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

இந்நிலையில் விஜய் டிவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்தால் அதில் அவ்வபோது பங்கேற்று வந்தார். அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அவ்வப்போது இவர் கூறும் கருத்துகளுக்கு எதிர் கருத்துக்களே ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா என்ற கணக்காக டைம் பாசுக்கு எல்லாம் ஜூலியை சமூக வலைதளங்களில் கலாய்த்து வந்தனர். கலாய்த்ததால் புகழ் அடைந்தார் என்றால் அது இவர் மட்டும்தான்.

இந்நிலையில் ஜூலி கடற்கரையோரத்தில் தொழிலதிபர் ஒருவருடன் ஜல்சாவில் ஈடுபட்டதாகவும், அதனை பார்த்த காவல்துறையினர் அதிரடியாக அவரை கைது செய்ததாகவும் ஒரு வெப்சைட்டில் செய்தி வெளிவந்துள்ளது. இதைப்பார்த்த ஜூலி உடனடியாக இந்த மாதிரி பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என அதிரடியாக அந்த தகவலை தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார். சொந்தக் காச செலவு பண்ணி என்னோட நிம்மதியை கெடுப்பதில் அப்படி என்ன சந்தோஷம் என கதறுகிறார் ஜூலி.

error

Enjoy this blog? Please spread the word :)