இந்தியச் செய்திகள்

பிரச்சாரக் கூட்டத்தில் குஸ்புவின் அந்தரங்கம் மீது கை!! பளார் விட்ட குஸ்பு!!

காங்கிரஸ் கட்சியில் உள்ள நடிகை குஷ்பு நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு தராத காங்கிரஸ் மேலிடம், திருச்சி தொகுதியில் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசருக்கு போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், குஷ்பு தேர்தல் பிரசார களத்தில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

மேலும் யாருக்கு ஆதரவாகவும் பிரசாரம் செய்யவில்லை என கேட்டதற்கு படப்பிடிப்பில் பிசியாக உள்ளதாக கூறி வந்துள்ளார். தற்போது நடிகை குஷ்பு கர்நாடகாவில் பிரசாரம் செய்து வரும் நிலையில், மத்திய பெங்களூரு காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்தை ஆதரித்து தமிழர்கள் வாழும் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த தொகுதிக்குட்பட்ட இந்திரா நகர் ஹொய்சலா நகரில் நடிகை குஷ்பு தொண்டர்களுடன் பேரணியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது தொண்டர் ஒருவர் குஷ்புவின் பின்னால் நின்று தகாத முறையில் சீண்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த குஷ்பு அவரின் கன்னத்தில் பளார் என அறை விட்டார். இதனால் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தொடர்ச்சியாக பாலியல் அத்து மீறலிலும், அடிதடி அராஜகத்திலும் ஈடுபட்டு வருவது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.