புதினங்களின் சங்கமம்

சஜித் மனைவிக்கு பிள்ளை இல்லை என்று கூறி ,சிக்கலில் மாட்டிய மஹிந்த ,வலுக்கும் எதிர்ப்பு

ண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் பேசிய மஹிந்த , சஜித் பிரேமதாசாவின் மனைவி ஜலனி பிரேமதாசாவின் மகப்பேற்று சுதந்திரத்தை இழிவு படுத்தும் வகையில் பேசி , அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதை சுட்டி காட்டி பேசியிருந்தார்.
இந்த நிலையில் இதற்கான எதிர்ப்புகளும் ஆர்ப்பாட்டங்களும் வலுத்து வருகின்றது . இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா தெரிவித்ததாவது , “மூன்று பிள்ளைகளுக்கு தந்தையும் ஒரு குழந்தைக்கு தாத்தாவும் பெண்களை அவமதித்துள்ளார் . அவமதிப்பு ஒரு குடும்பத்தை நோக்கியது அல்ல, ஆனால் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் பிற காரணங்களால் குழந்தைகளைத் தாங்க முடியாத எல்லா பெண்களையும் அவமதித்துள்ளார் . இது ஒரு குழந்தையை வளர்க்க முடியாத ஆண்களை நோக்கி கூட சொல்லப்பட்டுள்ளது . இதை ஒரு அரச தலைவர் செய்துள்ளார் ”என்று எஸ்.ஜே.பி வேட்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திரா போராட்டத்தின் போது தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்றையதினம் ட்விட்டரில் கருது வெளியிட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர , குழந்தை இல்லாத பிரதமர் நரேந்திர மோடி , மஹிந்த ராஜபக்சவை விட குறைந்த தலைவரை என்று கேள்வி எழுப்பி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் சில அமைப்புகள் இந்த விடயத்தை இலங்கைக்கு வெளியேயும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கொண்டு செல்வதில் முனைப்பு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது