யாழ்ப்பாணம் – மூளாய் பகுதியில் அதிகாலையில் வாள்களுடன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல்…..
யாழ்ப்பாணம் – மூளாய் பகுதியில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை 1.45 மணியளவில் ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி தங்க அபரணங்கள் கொள்ளையிட்டுள்ளார்கள்…
இவ் கொள்கையின் போது சுமார் 16 1/2 பவுன் தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாள், கோடரிகளுடன் வீட்டினுள் புகுந்த 06 கொள்ளையர்கள் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி கொள்ளையிட்டுச் தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

