புதினங்களின் சங்கமம்

கொழும்பில் பட்டதாரியான கிட்னி மோசடி மன்னன் சிக்கினான்! சில வைத்தியர்களுக்கும் சிக்கல்!!

இலங்கை அல்லது துருக்கியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தவற்காக ஒருகுடும்பத்திடம் இருந்து 3.4 மில்லியன் ரூபாய் வசூலித்த பின்னர் அந்த குடும்பத்தை ஏமாற்றிய இளைஞரை கைது செய்ததன் மூலம்,பாரிய சிறுநீரக மோசடி வலையமைப்பை சிதைக்க முடிந்துள்ளதாக ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்த ஹைதராபாத்தில் வசிக்கும் 25 வயது D.s. பவன் சீனிவாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
சீனிவாசும் சிறுநீரகத்தை தானம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதன்மூலம் பெரும் பணத்தினை பெற்றுக்கொண்டவர், சிறுநீரக மாற்று சிகிச்சை மூலம் பெரும் பணத்தினை சம்பாதிக்கலாம் என உணர்ந்த பின்னர், சிறுநீரக நன்கொடையாளர்களை ஏற்பாடு செய்யத் தொடங்கினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்,MBA பட்டதாரி ஒன்பது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு வசதி செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஒவ்வொரு மாற்று சிகிச்சையிலும், குற்றம் சாட்டப்பட்டவர் சுமார் 600,000 ரூபாய் கமிஷன் சம்பாதித்துள்ளார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, தங்குமிடம் மற்றும் சிறுநீரக நன்கொடையாளருக்கு பணம் செலுத்துதல் ஆகியவற்றிற்காக 3.4 மில்லியன் ரூபாய் செலுத்தியதாக ஒரு குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பவனுக்கு எதிராக மோசடி மற்றும் நம்பிக்கையை மீறியதாக வழக்கு பதிவு செய்திருந்தனர்.

பணம் சேகரித்த பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் குடும்பத்தினருடனான தொடர்புகளை துண்டித்துவிட்டதாகவும், தலைமறைவாக இருந்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அவரும் அவரது குடும்பத்தினரும் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சீனிவாஸுடன் தொடர்பு கொண்டதாக பிஞ்சலா பாரதி பஞ்சாரா, ஹில்ஸ் பகுதி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

பாரதியின் கணவர்,ஒரு சிறுநீரக நோயாளி, டயலைசின் மூலமே உயிர் வாழ்ந்து வருகிறார்.

இலங்கை அல்லது துருக்கியில் உள்ள தனது அறியப்பட்ட ஆதாரங்கள் மூலம் ஒரு நன்கொடையாளரை வழங்குவதற்கும், மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கும் அவர் அவர்களுக்கு உறுதியளித்தார்.
அதற்காக அவர் பாரதியிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

பொலிஸ் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் இலங்கையில் கசினோ விளையாட்டுகளில் பெருமளவில் செலவழித்ததாகவும், நன்கொடையாளர் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை செய்யாமல் குடும்பத்தை ஏமாற்றியதாகவும் தெரியவந்துள்ளது.

பங்குச் சந்தையில் இழப்பு ஏற்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் 2013 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்துள்ளார்.
அங்கு அவர் தனது சிறுநீரகத்தை பணம் பெறுவதற்காக விற்றுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் கொழும்பிலுள்ள சில மருத்துவர்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார்.
சுலபமாக பணம் சம்பாதிப்பதற்காக, தேவைப்படும் நோயாளிகளுக்கு நன்கொடையாளர்களை வழங்க ஒரு முகவராக பணியாற்றுவதற்கான திட்டத்தை அவர் தொடங்கினார்.
அவர் சமூக ஊடகங்கள் மூலம் ஏழை மக்களை கவர்ந்திழுக்கத் தொடங்கினார், மேலும் அவர்களின் சிறுநீரகங்களை பணத்திற்காக தானம் செய்யத் தயாராக்கினார்.
அவர் இலங்கை மற்றும் துருக்கியில் உள்ள சில மருத்துவமனைகளிலுள்ள தனது தொடர்புகள் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை ஒழுங்குபடுத்தி வநௌதுள்ளார்.
இந்தியாவில் தெலுங்கு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளில் பவன் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர் இலங்கையில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்தும் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் பல முக்கிய புள்ளிகள் குறித்த தகவல்கள் கசியலாமெனவும் பொலிசார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.