Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியில் யானையால் நசுக்கி கொல்லப்பட்ட முதியவர்! சடலத்தை காட்டிக் கொடுத்த வளர்ப்பு நாய்!

கிளிநொச்சியில் யானையால் நசுக்கி கொல்லப்பட்ட முதியவர்! சடலத்தை காட்டிக் கொடுத்த வளர்ப்பு நாய்!

பூநகரியைச் சேர்ந்த சுமார் 65 வயதுடைய முதியவர் ஒருவர் யானைத்தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாடுகளை பராமரித்து மீண்டும் அழைத்து வருவதற்காகச் சென்ற அவர், தனது வளர்ப்பு நாய்கள் இரண்டையும் உடன் அழைத்துச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், குடும்பத்தினர் அவரைத் தேடியுள்ளனர்.

தேடுதலின்போது ஒரு நாய் வீட்டிற்கு திரும்பியிருந்த நிலையில், மற்றைய நாய் சம்பவ இடத்திற்கு அருகில் சடலம் கிடந்த இடத்திலேயே காவலாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நாயை அடையாளமாகக் கொண்டு தேடியபோதே, முதியவர் இருந்த இடத்தை குடும்பத்தினரால் கண்டுபிடிக்க முடிந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, இன்று காலை 11.55 மணியளவில் உடலம் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments