Home புதினங்களின் சங்கமம் யாழ் திருநெல்வேலிச் சந்தைப் பகுதியில் வாள் வெட்டுத் தாக்குதல்!! இருவர் படுகாயம்!!

யாழ் திருநெல்வேலிச் சந்தைப் பகுதியில் வாள் வெட்டுத் தாக்குதல்!! இருவர் படுகாயம்!!

யாழ் திருநெல்வேலி சந்தைப் பகுதியில் நடந்த வாள் வெட்டுத் தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். குறித்த பகுதியில் நாட்டாமை வேலை செய்யும் இருவர் அப்பகுதியில் உள்ள சாராயக்கடை ஒன்றில் சாராயம் குடிக்கச் சென்ற போது இருவருக்குமிடையில் முரன்பாடு ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து அங்கு வைத்து ஒருவர் மீது மற்றவர் வாள் வெட்டுத் தாக்குதல் நடாத்தியதாகவும் நடாத்திவிட்டு வெளியேறி வந்தவரை மற்றைய தரப்பினர் துரத்தித் துரத்தி திருநெல்வேலிச் சந்தையில் உள்ள கடை ஒன்றின் முன் வைத்து வெட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கினறன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments