புதினங்களின் சங்கமம்

லண்டன் தமிழர்களே ஜாக்கிரதை- புதுவகையான கார் கொள்ளை 7 நாட்களில் 5 தடவை (Video)

லண்டனில் வெம்பிளி, ஹரோ , பினர் என்று பல இடங்களில் குறிப்பிட்ட ஒரு கும்பல் விலை உயர்ந்த கார்களை பட்டப் பகலில் கொள்ளையடித்து வருகிறார்கள். ஒரு விலை உயர்ந்த காரை வீதியில் கண்டால் போதும். அதனை ஒரு பெண் ஓட்டிச் சென்றால் இன்னும் ஆபத்து. அவரை பின் தொடர்ந்து வரும் 4 பேர் கொண்ட குழு. காரை பார்க் செய்யும் போது , கிட்ட வந்து உங்களை தாக்கிவிட்டு கார் சாவியை எடுத்துக் கொண்டு காரை களவாடிச் செல்கிறார்கள்.

கடந்த 7 நாட்களில் மட்டும் 5 தடவை இது போல நடந்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ள அதேவேளை. ஒரே கும்பல் தான் இதனை தொடர்சியாக செய்து வருவதாகவும் கூறியுள்ளார்கள். பொலிசார் தற்போது பொது மக்களின் உதவியை நாடியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.