முன்னாள் பெண் போராளி மீது கொடூர தாக்குதல்!!! சிறிதரனின் அடியாள் வேளமாளிகிதன் மீண்டும் அட்டகாசம்!! (Photos)
கிளிநொச்சி திருநகர் தெற்கில் வசித்து வந்த மூன்று மாவீரர்களின் சகோதரியும், கணவன் காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியுமான எழில்வேந்தன் கோணேஸ்வரி தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, அவர் வசித்த வந்த வீடு உடைக்கப்பட்டு அவரது உடமைகள் வீதியில் வீசப்பட்டுள்ளன. இப்பொழுது இரண்டு பிள்ளைகளுடன் அவர் தெருவில் தள்ளப்பட்டுள்ளார்.
நள்ளிரவில் தொடர்பு கொண்டு “கொத்துரொட்டி கட்டிக்கொண்டு வரட்டுமா” என கிளிநொச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் அடியாளும் கரைச்சிப் பிரதேசசபை தவிசாளருமான வேளமாளிகிதன் கேட்ட விடயத்தை அம்பலப்படுத்தியதனால் தனக்கு இந்த நிலைமை என பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் தெரிவித்தார்.
பொலீஸ் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



