யாழ்.பல்கலை தமிழ் மாணவர்களுக்கிடையில் மோதல்! தடுக்கச் சென்ற சிங்கள மாணவன் மீது கத்திக் குத்து!!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் தமிழ், சிங்கள மாணவர்கள் இருவரிற்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் வெட்டுக் காயத்திற்கு இலக்காகியுள்ளார்.
மற்றைய மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (17) இரவு இந்த சம்பவம் நடந்தது. பழம் வீதியிலுள்ள ஆண்கள் தனியார் விடுதியில் நேற்று இந்த சம்பவம் நடந்தது.
விடுதியில் நடந்த மது விருந்தில் கலந்து கொண்ட தமிழ், சிங்கள மாணவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் சிங்கள மாணவன் மீது, தமிழ் மாணவன் கத்தி வெட்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
காயமடைந்த சிங்கள மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்திய தமிழ் மாணவனை, யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர்.

