புதினங்களின் சங்கமம்

உரும்பிராயில் விபத்து, பெண் பலி, கணவர் படுகாயம்!!

யாழ் உரும்பிராய் சந்திக்குஅருகில் நேற்று மாலை ஏழு முப்பது மணி அளவில் இடம்பெற்ற விபத்தில் 27 வயதான குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் குரும்பசிட்டி வசாவிளான்பகுதியைச் சேர்ந்த அனோஜன் கஜேந்தினி வயது 27 என்ற பெண்ணை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஉரும்பிராய் சந்திக்கு அண்மையில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது பட்டாவுடன் மோதி எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகியுள்ளார். இதில் சம்பவ இடத்தில் இளம் குடும்பப் பெண்உயிரிழந்ததுடன் அவரது கணவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து சம்பந்தமான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.