புதினங்களின் சங்கமம்

யாழ் கோப்பாய் பொலிசாரையும் விட்டு வைக்காத கொரோனா!! 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!!

யாழ் மாவட்டத்திலுள்ள கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 3 உத்தியோகத்தர்கள் நேற்று மாலை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோப்பாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அண்மையில் வெலிக்கடைச் சிறையில் இருந்து விடுதலையாகி சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அவருடன் வெலிக்கடை சிறையில் இருந்த சந்தேக நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வந்த குறித்த நபர் மீண்டும் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட நபரை ஏற்றிச்சென்ற கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று உத்தியோகத்தர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.