புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் இளைஞன் சிறுமியை வல்லுறவுக்குள்ளாக்க உதவிய சிறுமியின் தாயார் கைது!!

மட்டகளப்பு மாவட்டம் அக்கறைப்பறுப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுமியை வன்புணர்ந்தார் என்கிற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரும் அவருக்கு உதவினார் என்கிற குற்றச்சாட்டில் சிறிமியின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க அக்கறைப்பற்று நீதிவான் எம்.எச்.எம்.கம்சா உத்தரவிட்டார்.

பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞர் சிறுமியின் தாயாரது காதலன் என்று பொலிஸார் கூறுகின்றனர். சிறுமியின் தந்தை மூன்று வருடங்களாக வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார்.

இந்த வழக்குக் குறித்துப் பொலிஸார் தெரிவித்ததாவது:

பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வர்த்தகர் ஒருவருடன் திருமணமல்லாத தொடர்பைப் பேணி வந்தார். சுற்றுலாச் செல்வதாகக் கூறி மகளையும் அழைத்துச் சென்ற தாய் இரவு தங்கு விடுதியொன்றில் மகளை தனியான அறையொன்றில் தங்க வைத்துள்ளார். அது விடுதிக்குத் தனது காதலனையும் அழைத்துள்ளார்.

சிறுமியின் தாயும் அந்த ஆணும் மற்றொரு அறையில் தனியாகத் தங்கியிருந்துள்ளனர். அதேநேரம் தனது மகளுக்கு மயக்க மருந்தைக் கொடுத்த தாய் அவரை தனது காதலன் வன்புணர்வதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

மயக்கம் தெளிந்து சிறுமி தான் வன்புணரப்பட்டதை உணர்ந்ததும் தாயும் அவரது காதலனும் விடயத்தை வெளியில் சொன்னால் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிவரும் என அச்சுறுத்தியுள்ளனர்.

வீடு வந்து சேர்ந்த சிறுமி வேதனை தாங்க முடியாமல் உறவினர்களிடம் நடந்ததைக் கூறியதை அடுத்து அவர்கள் சிறுமியை அழைத்துவந்து முறைப்பாடு பதிவு செய்தனர். இதனையடுத்து சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.