புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரான்ஸ் ரியூனியன் தீவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பவிருந்த 5 தமிழர்கள் விமான நிலையத்திலிருந்து தப்பி ஓட்டம்!!!

ரியூனியன் தீவின் ​​Gillot விமான நிலையத்தில் வைத்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்த இலங்கையர்களில் ஐவர் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். பின்னர் அவர்கள் வெவ்வேறு இடங்களில் வைத்துப் பொலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இலங்கையில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி படகு மூலம் ரியூனியன் தீவுக்கு வந்தடைந்த

குடியேறிகள் 53 பேர் அடங்கிய தொகுதியினரில் ஐவரே Gillot விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து கடந்த திங்களன்று இவ்வாறு தப்பியோடி உள்ளனர். அவர்களோடு வேறு 16 பேரும் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர். வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் ஒன்றில் அவர்கள் அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்கு அனுப்பிவைக்கப்படவிருந்தனர்.

35 – 40 வயதுகளுக்கு இடைப்பட்ட ஐந்து குடியேறிகளே தப்பியோடினர் என்றும் அவர்கள் ஐவரும் பின்னர் கடந்த புதனன்று தீவின் இரு இடங்களில் வைத்துக் கைது செய்யப்பட்டனர் எனவும் ரியூனியன் பொலீஸ் நிர்வாகம்

தெரிவித்துள்ளது.