புதினங்களின் சங்கமம்

யாழில் செத்தவீட்டுக்குச் சென்று திரும்பியவர்களுக்கு வீட்டில் ஏற்பட்ட அதிர்ச்சி!!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் பட்டப்பகலில் வீட்டில் எவரும் இல்லாத வேளை 5 பவுண் தங்க நகையும் 50 ஆயிரம் ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனைக்கோட்டை கூலாவடிக்கு அண்மையில் ஒழுங்கையில் உள்ள வீடொன்றிலேயே இன்று (20) சனிக்கிழமை முற்பகல் 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையே இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது.

வீட்டில் வசிப்பவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், அலுமாரியை சல்லடை போட்டுத் தேடி அதில் வைக்கப்பட்டிருந்த 5 பவுண் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபா பணத்தைத் திருடிக் கொண்டு தப்பித்துள்ளனர்.

இறப்பு வீடு ஒன்றுக்குச் சென்று திரும்பிய குடும்பத்தலைவர் வீடு உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராய்ந்த போதே திருட்டுச் சம்பவம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டனர்.