சிவாஜிலிங்கத்துக்கு மல்லாகம் நீதிமன்றம் அழைப்பாணை!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தினை நாளை நண்பகல் முன்னிலையாகுமாறு யாழ்ப்பாணம் மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்தின் படுகொலை நினைவேந்தல் நிகழ்வினை சிவாஜிலிங்கம் முன்னெடுக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதனை தடுத்து நிறுத்துமாறு கோரி மானிப்பாய் பொலிஸார் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தன்னை நாளை நண்பகல் 12 மணிக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை கிடைக்கப்பெற்றுள்ளதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதி நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடத்தப்பட்ட விமானக் குண்டுத் தாக்குதலில் 150 மக்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

