புதுக்குடியிருப்பில் கிணற்றை ஆழப்படுத்த இறங்கிய இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட நேசன் குடியிருப்பு உரம் வட்டாரத்தில் கடும் வறட்சி காரணமாக மக்களின் கிணறுகளில் நீர் வற்றிகாணப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள வீட்டு கிணறு ஒன்றினை ஆழப்படுத்துவதற்காக இன்று காலை கிணற்றுக்குள் இறங்கி மயங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் போது புதுக்குடியிருப்பு 01.வட்டாரத்தைச் சேர்ந்த செ.திலகச்செல்வன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தைஉயிர் இழந்த நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார். 24 வயது உடைய இளைஞன் மயக்கமடைந்த நிலையில் அருகில் உள்ளவர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது கிணற்றில் இறங்கியவர்கள் மயக்கமடைந்த நிலையில் அருகிலுள்ளவர்களின் உதவியுடன் கிணற்றிற்குள் வேப்பம் இலைகள் கட்டி இரக்கப்பட்டு ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் மற்றவர் உயிரிழந்த உள்ளார்
