புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பு புளுகுனாவ குளத்தில் என்ன நடக்கின்றது?? (Photos)

மட்டக்களப்பு நகரிலிருந்து மண்முனை பாலம் வழியாக தாந்தா மலை முருகன் கோவிலுக்கு செல்லும் வீதியால் செல்லும் போது 34 கிலோமீட்டர் தூரத்தில் இந்த குளத்தினை சென்றடையலாம்.

கூகுள் வரைபட இணைப்பினையும் இதில் இணைக்கிறேன்
https://maps.app.goo.gl/aZEAUp2Cvpyx5QTeA

தந்தா மலை சந்தி வரை நல்ல காப்பெட் வீதி போட்டிருக்காங்க அதுக்கு பிறகு கிரவல் வீதி தான்.
போய் சேர அண்ணளவாக 1 1/2 மணித்தியாலம் எடுக்கும்.
(அந்த ரோட்டால போய் வந்தா போட்டிருக்கிற உடுப்பு நிறம் மாறுற அளவுக்கு கிறவல் புழுதி பட்டிருக்கும்.)

போற வழியெல்லாம் நெல் வாசம் தான்… இப்ப நெல் வயல் வெட்டு காலம் என்றதால வெள்ளாமை விளைஞ்சி போயிருந்திச்சி போட்டிருந்த கொரோனா மாஸ்க்க கழட்டிட்டு நெல் வாசனையோட வாகனம் ஓட நல்லா தான் இருந்திச்சி..

குளம், காடு என்று போற நேரம் யானைக்கு பஞ்சம் இருக்காது. இங்கயும் அதே நிலமை தான் யானை வேலியும், யானை நடமாடும் இடம் என்ற எச்சரிக்கை பலகையும் திரும்பின பக்கமெல்லாம் இருந்திச்சி. ( பகல்ல யானை வராதாம் அதால பயம் வரல்ல)

குளத்துல தண்ணி வத்தின காலம் இது. இந்த நாள்ல குளத்துக்கு மீன் பிடிக்க போக மாட்டாங்க. ( பெரிய கண் வலை கட்டி மீன் பிடிக்கலாம், பெரிய தூண்டலும் போடலாம்)

இந்த தண்ணி வத்துன காலத்துல தான் மீன் குஞ்சுகள் வாங்கி குளத்துல வெச்சி வளர்பாங்களாம். அதால ஒருத்தரையும் சின்ன கண் வலை வீசி மீன் பிடிக்க கொஞ்ச நாளைக்கு விட மாட்டாங்களாம்.

நாங்க அந்த பக்கம் இருக்கிற நண்பன் ஒருவனின் வீட்டில் சமையலுக்கு தேவையான சாமானுகளும் பசு பால் கொண்டு போற வாளியில குடி தண்ணீரும் எடுத்துகொண்டு. குளத்துக்கு வந்து சேர்ந்தோம். ( குளத்தில துரிசு ஒன்று இருக்கு அதுலயும் குடிக்கிற தண்ணி எடுக்கலாம்)

அங்க துரிசுல எடுகிற தண்ணி எப்பிடி இருக்கும் என்று நாங்க முயற்சி செய்து பார்கல்ல.. எதுக்கும் தண்ணி கொண்டு வாறது நல்லது.

குளத்துல தண்ணிய விட அடையல் கல் குன்றுகள் தான் அதிகமாக காணக்கூடியதாக இருக்கு. நல்லா தண்ணி இருக்கிற காலத்துல மீன் கல்லுல வைத்த சினைகள் எல்லாம் இப்ப தண்ணி வத்தின காலத்துல நல்லா வெளிய தெரியுது

அந்த சினைகள்ள கையை வைத்தல் அன்றைய நாள் முழுதும் கையை சொறிஞ்சி கொண்டு தான் திரியணும். அவ்வளவு கடி கடிக்கும்.

வந்து சேர்ந்த களைப்புல கொண்டு வந்த சோடா போத்தல் ஒன்ற திறந்து குடிச்சிட்டு. 2 பேர் சமையல் வேலைய பார்க்க மிச்ச 5 பேரும் மீன் பிடிக்க தூண்டிலோட கரையில இருந்த தோணி ஒண்டையும் தள்ளிக்கொண்டு போய் ஒரு மாதிரியா 1 மணி மட்டில 7 பேரும் சாப்பிட கூடிய அளவு நல்ல பெரிய 3 மீன் கொண்டு வந்தம்.

மீன் பிடிச்சி அதை வெட்டி கொண்டு வாற நேரத்துல வாங்கி வந்த கோழி இறைச்சி சமைப்பதற்கு எல்லாம் ரெடியா இருந்திச்சி.

மீனை 2 பேர் நெருப்பில சுட, 2 பேர் இறைச்சியை சமைக்க சரியா 2 மணிக்கு கிட்டத்தட்ட நேரம் வந்திட்டு.

2.30 மட்டுல, செய்த “fried rice” உம் இறைச்சி கறியும் வெச்சி வாழையிலைல எல்லாரும் இருந்து சாப்பிட்டு முடிச்சம்.
(நெருப்புல சுட்ட மீன் எல்லாம் இடைல எப்பிடி காணாம போச்சிது என்றது எனக்கும் மர்மமாக தான் இருந்திச்சி… இறக்க இறக்க சாப்பிட்டுத்தானுகள் ?)

பிறகு சாப்பிட்ட மயக்கத்துல 5 பேர் அவடத்தையே படுத்து நித்திரை 2 பேர் கமராவ எடுத்துகொண்டு குளத்தை சுற்றி போட்டோ எடுக்க கிளம்பினானுகள்.

அவங்க எடுத்த படங்கள் தான் இப்ப நாங்க இதுல போட்டிருக்கிற படங்கள்.
போட்டோ கிரெடிட் Sri Sajive

இங்க சுற்றுலா வந்தா..
1. மீன் பிடிக்கலாம்
2. நீருக்கு கீழ இருக்கிற பாறைகள பார்க்கலாம்.
3. பல மரங்கள்ள நடுவுல இருக்கிற தண்டுல இருந்து வேர் வாறத பாக்கலாம்.
4. சமைச்சி சாப்பிடலாம்.
5. குளிக்கலாம். ( வீட்ட போய் திரும்ப ஒழுங்கா குளிக்கணும் இல்லண்டா கடி எழும்பிடும்.)
6. பல வகையான நீர், காட்டு பறவைகளை பார்க்கலாம்.
7. படகுல சவாரி போய் குளத்தை சுற்றி போட்டோ எடுக்கலாம்.
8. 6 மணிக்கு பிறகு நிண்டா யானைட்ட அடி வாங்கலாம்.

வழமையா சொல்றது தான் எங்கேயும் போய் வந்தா அந்த அனுபவங்கள மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க அதுக்கான ஒரு தளமாக முகப்புத்தகத்தினை நான் பயன்படுத்திக்கொண்டு இருக்கன்.

எமது சிறியதொரு அனுபவம் பிறிதொருவரது மூலதனமாக அமையலாம்.
18/6/2020

#மட்டுநகர்_திவா

Image may contain: sky, outdoor and natureImage may contain: mountain, grass, outdoor and natureImage may contain: sky, outdoor and natureImage may contain: one or more people, sky, tree, outdoor and natureImage may contain: mountain, grass, sky, outdoor and natureImage may contain: 1 person, mountain, outdoor and natureImage may contain: sky, tree, plant, outdoor and natureImage may contain: tree, plant, sky, outdoor and natureImage may contain: ocean, outdoor, nature and waterImage may contain: 1 person, ocean, outdoor and waterImage may contain: sky, mountain, outdoor and natureImage may contain: outdoor, nature and waterImage may contain: sky, outdoor, nature and waterImage may contain: mountain, outdoor, nature and waterImage may contain: outdoor, water and natureImage may contain: sky, cloud, outdoor and natureImage may contain: mountain, sky, outdoor and natureImage may contain: tree, outdoor and natureImage may contain: foodImage may contain: tree, plant, outdoor and natureImage may contain: mountain, outdoor, nature and water