புதினங்களின் சங்கமம்

யாழ் உரும்பிராய் சந்தியில் நடந்த விபத்தில் டிப்பர் சில்லுக்குள் நசியுண்ட மோட்டார் சைக்கிள்!!(Photos)

யாழ்.உரும்பிராய் சந்தியில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தெய்வாதீனமாக உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

விபத்துக்குள்ளானவர் பயணித்த மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்படுள்ளதுடன் பாரிய சேதத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் குறித்த நபர் தூக்கி வீசப்பட்ட நிலையில் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Image may contain: outdoorிImage may contain: one or more people and outdoorImage may contain: outdoorImage may contain: 1 person, standing and outdoorImage may contain: 2 people, people walking, sky, cloud and outdoorImage may contain: one or more people, car, shoes and outdoor