யாழில் பயங்கர வெடிமருந்து கடத்தி பதுங்கியிருந்தவர்கள் கைது!! எதற்காக கடத்தினார்கள்??
யாழ்.அரியாலை, எழுதுமட்டுவாள் பகுதிகளில் பதுங்கியிருந்த இருவர் படையினாரால்
கைது..! சீ-4 வெடிமருந்து திருடியதன் பின்னணி, தீவிர விசாரணை ஆரம்பம்..
கிளிநொச்சி- முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றும் தொற்று நிறுவனத்திற்குள் புகுந்து
சீ-4 வெடிமருந்து திருடிய குற்றச்சாட்டில், அரியாலை, எழுதுமட்டுவாள் பகுதிகளில்
இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றும் தொண்டு நிறுவனத்திற்குள் நேற்று இரவு புகுந்த
இருவர் சீ-4 வெடிமருந்தை திருடிய நிலையில் தொண்டு நிறுவனத்தின் காவலாளி இவர்களை
கண்டுள்ளார்.
இதனையடுத்து அவர் பொலிஸாருக்கும், படையினருக்கும் அறிவித்ததை தொடர்ந்து சம்பவ
இடத்திற்குள் உடனடியாக நுழைந்த படையினரை கண்ட திருடர்கள் வெடிமருந்தை வீசிவிட்டு தப்பி
ஓடியிருக்கின்றனர்.
குறித்த இருவரும் அவர்கள் கொண்டுவந்த மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடுவதை காவலாளி தனது
தொலைபேசியில் படம் பிடித்துள்ளார். அதில் உள்ள மோட்டார் சைக்கிள் இலக்க தகட்டின்
அடிப்படையில் மானிப்பாய்
ஏழாலை பகுதிகளில் நேற்றிரவு தொடக்கம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்ட நிலையில்
அரியாலை மற்றும், எழுதுமட்டுவாள் பகுதிகளில் பதுங்கியிருந்த சந்தேகநபர்களை இராணுவம்
மற்றும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் இவர்கள் இருவரும் முகமாலை பகுதிக்கு கருக்குமட்டை வெட்டுவதற்காக செல்பவர்கள்
எனவும் அங்கு எதற்காக வெடிமருந்தை திருடினர் என தீவிர விசாரணை இடம்பெறுவதாகவும்
கூறப்படுகின்றது.

