புதினங்களின் சங்கமம்

ஆவா குழு காவாலிகளின் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிய 26 காவாலிகள் யாழ் பொலிஸாரால் கைது !

ஆவா குழு காவாலிகளின் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிய 26 இளம் காவாலிகள் யாழ் பொலிஸாரால் கைது !ஆவா குழு தலைவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு கேக் வெட்டிக் கொண்டாடிய இவர்களை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கோண்டாவில் பகுதியில் வைத்து இன்று (15) மாலை, ஆவா குழு தலைவர் என கூறப்படும் சன்னாவின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த யாழ்ப்பாணம் பொலிஸார், குறித்த சம்பவ இடத்திற்கு சென்று கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.