புலம்பெயர் தமிழர்

கனடாவில் மனைவியைக் கொலை செய்த சிவலோகநாதன் வழக்கில் திடீர் திருப்பம்!! நடந்தது என்ன?

இலங்கை தமிழரான சிவலோகநாதன் தனபாலசிங்கம் மீது சுமத்தப்பட்டுள்ள கொலை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கியூபெக் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.இதன்படி, சிவலோகநாதன் தனபாலசிங்கம் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில், அவர் இல்லாது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விடுத்த உத்தரவுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. 2017ம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் சிவலோகநாதன் தனபாலசிங்கம் கைது செய்யப்பட்டார்.தனபாலசிங்கத்தின் மனைவி அனுஜா பாஸ்கரன், அவரது வீட்டில் கழுத்தில் கத்திக் குத்துக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த கொலை குற்றச்சாட்டுக்கு இடைக்காலத்தடை வாங்கியதைத் தொடர்ந்து தனபாலசிங்கம் சமுதாயத்துக்கு ஆபத்தானவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு, மீண்டும் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையிலும், மேல் முறையீட்டு வழக்கில் விசாரணை தொடங்கப்படுவதற்கு முன்னரே தனபாலசிங்கம் நாடு கடத்தப்பட்டார்.இந்நிலையில், தற்போது கீழ் நீதிமன்றத்தின் முடிவு தவறானது என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்டவர் கனடாவில் இல்லையென்றாலும் அவர் மீதான வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.