புதினங்களின் சங்கமம்

முல்லை. சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!!

முல்லைத்தீவு மாத்தளன் அம்பலவன் பொக்கணை பகுதியில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலை கொண்டு சென்றபோதும் அங்கு சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளான்.
அம்பலவன் பொக்கணை கிராமத்தை கிருஸண்மூர்த்தி துஸ்யந்தன் (வயது-15) என்ற சிறுவனே உயிரிழநதவராவார்.
நேற்று காலை வீட்டில் இருந்து விளையாடிய சிறுவன் தாயார் கடற்கரைக்கு தொழிலுக்காக சென்ற நிலையில் தந்தையார் வீட்டிற்கு வெளியே உறங்கிக்கொண்டிருந்த நிலையில் சிறுவன் தூக்கிட்டதாக தெரியவருகின்றது.
தாயார் வேலை முடிந்து வீடு தூக்கில் தொhங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக சிறுவனை மீட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை எடுத்து சென்றபோதும் சிறுவன் உயிரிழநததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.;
இச்சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.